கலையைப் பொதுவில் வைப்பது

தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன.

பண்டைக்காலத்தில் புரவலனை நாடித்தான் புலவர்கள் போய்ப் பாடிப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடினிகளும் ஆற்றுப் படுத்தப்பட்ட விதங்களைத் தமிழிலக்கியங்கள் சாட்சிப்படுத்துகின்றன. புரவலன் இல்லையென்றால் இறைவன். இறைவன் இருப்பதாக நம்பும் இடத்தில் நின்று நெக்குருகிப் பாடியிருக்கிறார்கள். ஒரு பொது இடத்தில் நின்று இலக்கற்ற பார்வையாளர்களை நோக்கிக் கவிதை பாடிய கவிஞனை நமது பாரம்பரியத்தில் காணவில்லை. தனது சொல்லாடல்களை முன்வைத்த தத்துவவாதிகளை வரலாறு அடையாளப்படுத்தவில்லை. பாங்கருந்தேறிய பட்டிமண்டபங்கள் நடந்த இடங்களெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள் அமைப்புக்குள்ளிருந்து செயல்படும் பாணிகளே இந்திய/ தமிழகப் பாணிகள்.
இதற்கு மாறானது ஐரோப்பிய அறிவுவாத மனம். 
பேச்சு, எழுத்து, ஆடல், பாடல், ஓவியம் என ஒவ்வொன்றையும் மக்களை நோக்கி இலக்கற்ற நிலையில் வெளிப்படுத்துவதை இப்போதும் பார்க்கிறேன்.

ஐரோப்பியப் பெருநகரங்கள் பலவற்றிலும் இதுபோன்ற கலைஞர்களைப் பொதுஇடங்களில் பார்த்திருக்கிறேன். இசைக்கலைஞர்கள், உடலியக்கக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
மாண்ட்ரியல் நகரின் மைய சதுக்கத்தில் ஒரு இசைக்கலைஞர்கள் குழு தங்களின் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகிங்ஸ்டன் நகரில் கொடியசைத்து இசையோடு தனது உடலை அசைத்து அந்தப் பொதுமன்றலில் உடற்பயிற்சி செய்வதுபோல நடனமாடிக் கொண்டிருந்தாள் ஓரிள மங்கை.வேடிக்கை பார்க்கவந்தவர்களிடம் கொடியைத் தந்து உடன் ஆடிப்பாட அழைத்து இணைந்து கொண்டாள். சின்ன இடைவேளையில் அவளோடு உரையாடியபோது அவளுக்குத் தினசரி செய்யவேண்டிய பயிற்சியாகவும் இருந்தது அந்த நடனம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்