வெயில் நன்று; கடல்காற்று இனிது

தொடர்ச்சியான பனிப்பிரதேச வாழ்க்கை மஅனிதத்தோலின் நிறத்தை உருவாக்குவதில் பங்குவகிக்கிறது. வெள்ளைத்தோல் கொண்ட ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கக் கண்டத்து மனிதர்களுக்கும் வெள்ளைத்தோல் ஒருவரம் என்றால், அதற்குத் தேவையான வைட்டமின் தேடுவது ஒருவேலை. சூரியவெளிச்சமும் வெப்பமும் தொடர்ச்சியாகக் கிடைக்காமல் போகும் நிலையில் வைட்டமின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது அவர்கள் சந்திக்கும் ஒருபிரச்சினை.

வைட்டமினைப் பெறுவதற்காகச் சூரியனின் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் எதிர்பார்த்துக்காத்திருப்பார்கள். வெயிலடிக்கும் மாதங்களில் வாரக்கடைசிகளில் விரிப்பான், நாற்காலி, சாப்பாடு என எல்லாத்தயாரிப்புகளோடும் வெள்ளிக்கிழமை இரவே கிளம்பிவிடுவார்கள். போலந்தில் இருந்தபோது விஸ்துலா ஆற்றின் கரைகளில் சனி, ஞாயிறுகளில் படுத்துக்கிடக்கும் மனிதர்களின் கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளிலும் கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளில் அந்த நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இந்தியக் கடல்களின் ஓரத்தில் கோடைகாலத்தில் உட்கார்ந்து பார்த்தால் நம் உடம்பு உப்புபடிந்து கரிக்கும். நான்கு வருடங்கள் நான் பாண்டிச்சேரியின் கடலோரத்தில் கருவடிக்குப்பத்தில் அருகில் அங்காளம்மன் நகரில் இருந்தேன். கோடையில் சூரியன் மறையும்வரை சாளரங்களைத் திறக்கவே மாட்டோம். ஆனால் ஆறுமணிக்குமேல் ஒரு இதமான காற்று வீசும். அது ஆனந்தமானது. அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் வெயிலும் பக்கத்தில் நீர்ப்பரப்பும் என்பது உடலுக்கு இதமானதாக இருக்கிறது. வாரக்கடைசி நாட்களில் குடும்பத்தோடு பெட்டி,படுக்கை,நாற்காலி, சாப்பாடு சகிதமாகக் கிளம்பிப்போகிறார்கள். பரந்துவிரிந்துகிடக்கும் கடற்கரைகளிலும் ஆற்றங்கரை மணலிலும் அவிழ்த்துப் போட்டும் படுத்துக்கிடக்கிறார்கள். உடம்பின் எல்லாப்பகுதிகளிலும் வெயில்படவேண்டுமெனப் புரண்டு கிடக்கிறார்கள். ஆணுடலும் பெண்ணுடலும் பரவிக்கிடக்கும் கடலோரங்களின் காட்சிகள் கோடைகாலக்குறிப்புகள். .
பாஸ்டனிலிருந்து 100 நிமிடப் பயணதூரத்தில் இருக்கும் ரோட் தீவு (Rhode Island) அந்தத் தீவு மட்டுமே சிறிய தனிமாநிலம். தீவின் கடற்கரையில் நடந்ததோடு கடலோரத்தில் இருக்கும் நடக்கும் வளையம் ஒன்றில் நடந்து நியூபோர்ட் (Newport) சிறுநகரத்தைச் சுற்றி வந்தபோது அமெரிக்க வாழ்க்கையின் செழிப்பும் செலவழிக்கும் விதமும் புரிந்தன.========================================



/28/05/16


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்