இடுகைகள்

ஊடக அதிகாரம்

தமிழர்களாகிய நாம் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாள் கொண்டாட்டங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொலைக்காட்சியைப் பெட்டியை ஆக்கிப் பல வருடங்களாகி விட்டன. தொலைக்காட்சிப் பெட்டிகளோ விழாநாள் மனிதர்களாகத் திரைப்பட நட்சத்திரங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றன. தீபாவளி என்றால் புத்தாடைகள் அணிந்து வேட்டுப் போடுகிறார்கள்; புத்தாண்டு என்றால் கேக் வெட்டிப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஊட்டி விட்டுத் தாங்களும் சாப்பிடுகிறார்கள். பொங்கல் என்றால் பட்டு வேட்டி கட்டிக் கரும்பு தின்கிறார்கள்; முடிந்தால் பக்கத்திலிருக்கும் கிராமத்திற்கும் சென்று வயல் வெளிகளைச் சுத்தியும் வருகிறார்கள்.

கீழ்த்திசை நாடுகளின் பொதுமனம்

மிக நிதானமாக நடத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் முடிவுகளை அம்மாநிலத்து அரசியல்வாதிகள் பொறுப்போடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைத்து விடலாம் என்ற சாதகமான அம்சம் இருந்த போதிலும் தேர்தலுக்கு முந்திய கூட்டணியை மாநிலக் கட்சிகள் விரும்பவில்லை என்பதுதான் காஷ்மீரின் யதார்த்தம், மாநிலக் கட்சிகளான பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சரி தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு தேர்தலுக்கு முந்திய உடன்பாடு கொள்ள விரும்பவில்லை.

தமிழக அரசியல் : கனவுலகவாசிகளின் கனவுலகம்

படம்
  தமிழ்த் திரைப்பட உலகம் ஒரு கனவுத் தொழிற்சாலை, தமிழ்ச் சமூகத்திற்கு கனவுகளை உற்பத்தி செய்யும் அந்தக் கனவுலகவாசிகளுக்கே இன்னொரு கனவுப் பரப்பாக   ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் அரசியல் வெளி.     அந்த ஆசை யாருக்குத்தான இல்லை? தமிழ்நாட்டின் அரசியல் பிரமுகராக ஆக வேண்டும் என்ற ஆசை சினிமாவிற்குள் இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாகத் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக வேண்டும் என்ற ஆசை நாயக நடிகா்களின் ஆசையாக மலா்ந்துவிடுகிறது. இப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை. அது ஒரு கனவாக மாறிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், நாயக நடிகா் விஜயகாந்த் இப்பொழுது தனது கனவுகளுக்கு வண்ணம் தீட்டத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்கன் கல்லூரி: அலையும் நினைவுகள்

படம்
எங்கெங்கோ முட்டி மோதினாலும் மீண்டும் மீண்டும் நுழைவாயிலை நோட்டம் விடத் தவறப் போவதில்லை. இந்த வரிகள் 1980 ஆண்டின் கல்லூரி ஆண்டு மலரில் எழுதிய நீண்ட கவிதையின் சிலவரிகள். கவிதைக்கான தலைப்பு: உன்னைப் பிரிய முடியாமல் . இன்று இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. என்றாலும் ஆண்டிற்கு இரண்டு தடவைக்குக் குறையாமல் கல்லூரிக்குள் நுழைந்து ஒரு சுற்றுப் போட்டுவிட்டு வருவதை நிறுத்தி விடவில்லை. காரணம் எதுவும் இல்லையென்றாலும் - அந்தவழியாகப் போக நேர்ந்தால் உள்ளே போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கையில் இருக்கும் புத்தகத்தைத் திறந்து படித்து விட்டுத் தான் வருவேன்.