இடுகைகள்

மூன்றாவது சிலுவை: காமரூபத்தின் நியாயங்கள்

படம்
                 இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.                                       பெண்களை ஆவேசமாக எதிர்வினையாற்றத்தூண்டும் -  என்றொரு அட்டைக் குறிப்புடன் காலச்சுவடு பதிப்பகம் ஒரு நாவலை  வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு மூன்றாவது சிலுவை. இந்த நாவலை எழுதியுள்ளவர் பெயர் உமா வரதராஜன் ; இவர் ஓர் ஆண் என்ற குறிப்பும் அந்த நாவலைப் படிப்பவர்களுக்காகத் தரப்பட்டுள்ளது.

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

தனக்கான அடிப்படைத் தேவைகளான உணவு , உடை , உறையுள் ஆகியனவற்றைத் தேடுவதன் முகாந்திரமாகச் சமூக நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது மனித சமூகம். அப்படி உருவாக்கிக் கொண்ட நிறுவனங்களுக்குள் மனிதர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் பனுவல்களை -அற நூல்களாக உருவாக்கித் தனது கருத்துக் கருவூலகமாகக் கொண்டன ஒவ்வொரு மொழிவழிச் சமுதாயமும். இப்படியான அறநூல்கள் ஒவ்வொரு மொழியின் இலக்கிய வரலாற்றிலும் தொடக்க காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு கருத்துருவாக்கிகளாக விளங்கியுள்ளன.  தமிழ்மொழியைத்தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் கருத்துப் பெட்டகமாக இருப்பது திருக்குறள்.

ஒச்சாயி: பெயரில் என்னதான் இல்லை?

படம்
“ரோஜா, ரோஜாவாக இருக்கிறது ” இந்த தொடர் சேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் இருக்கும் வாக்கியம். ஆனால் அதைத் தனது கவிதையின் தலைப்பாக மாற்றிக் கவிதை ஒன்றை எழுதியவன் கவி ஜெற்ரூட் ஸ்டெயின் என்று படித்த ஞாபகம். “என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா தான்;ஏனென்றால் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது ” என்று முடியும் அந்தக் கவிதை எப்போது ரோஜாப்பூக்களைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து விடும். ஒற்றை ரோஜாவைச் சொருகிக் கொண்டு முன்னே நடந்து செல்லும் பெண்களின் கூந்தல் அசைவைப் பார்க்கிற போது பல்வேறு வண்ணங்களில் விரிந்து நிற்கும் ரோஜாத் தோட்டங்களும், அவற்றின் இதழ் விரிப்பும், பனி படர்ந்த இலைகளும் புல்வெளிகளும், கொஞ்சம் கை தவறினால் கீறிப்பார்த்து ரத்தப் பலி கொள்ளக் காத்திருக்கும் முட்களும் நினைவுக்கு வருவதோடு அந்தக் கவிதையும் நினைவுக்கு வந்து விடும். என்றாலும் வார்த்தைகளை அடுக்கிச் சொன்னதன் மூலம் நினைவில் தங்கிக் கொண்டது. ரோஜாவின் அழகே இந்தக் கவிதையால் வந்தது தானோ என்று கூட நினைப்பதுண்டு.

இணைந்து கொள்வேம்

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு' எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர். படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நில