இடுகைகள்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….

இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

விருதுகளின் பெறுமதிகள்

படம்
தைமாதம் தமிழ்நாட்டின் அறுவடைக்காலம். அதனைத் தொடர்வது கொடையின் காலம். கொடை நடைபெறுகிறபோது கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. உடல் உழைப்பில் ஈடுபடும் தமிழக விவசாயிகளுக்குத் தை மாதம் கொண்டாட்டத்தைக் கொண்டு வரும் மாதமாக இருந்த நிலை இப்போது இல்லை. அதற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்ற புத்திஜீவிகளுக்கு தை மாதம் அறுவடைக்காலமாக மாறிவிட்டது.

சமகாலத்தமிழ்ச் சினிமாப் பண்பாடு - ஓர் அலசல்

படம்
ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த பாட்ஷா வெற்றிப் படமா ? தோல்விப் படமா ? என்று யாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப் பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும் , பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம்.

அன்பரே! தாங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்து கொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை. உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.