இடுகைகள்

தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்

படம்
தமிழக எல்லைக்குள் வாழ நேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தன்னையொரு தமிழ் உயிரியாகக் கருதிக்கொண்டாலும்சரி அல்லது இந்திய மனிதனாகக் கருதினாலும் சரி கடந்த பதினைந்து ஆண்டுகளில்-1990 முதலான பதினைந்து ஆண்டுகளில்- இரண்டு முக்கியமான நிகழ்வுளுக்காகத் தன் கவனத்தைத் திருப்பியிருக்க  வேண்டும். முதலாவது நிகழ்வு ஊடகப் பெருக்கம் என்னும் சர்வதேச நிகழ்வு.

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

படம்
பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப் பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்-புறம்

கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு: ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது. பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும் இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல. இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை. படைப்புப் பொருள்,படைப்புமுறை, படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன. படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல், அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம் சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன.

தமிழகத்தில் தலித் இலக்கியம்

படம்
தலித் - ஒரு பதமாக  நுழைந்து நிகழ்வாக மாறிவிட்ட அந்த வார்த்தைக்கு வயது பத்து. இருபதாம் நூற்றாண்டின்  இறுதிப் பத்தாண்டுகள்.  நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமிழ்ச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களை ஆக்ரமித்துக்கொண்ட சொல்லை - இதைப்போல் வேறு சொல்லை - தமிழ் மொழி இதற்கு முன் சந்தித்திருக்க வாயப்பில்லை.