இடுகைகள்

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்

படம்
‘ டாடா மோட்டார்ஸ் ’ சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து ( ஷட்டில் ) விளையாடப் போயிருக்க மாட்டேன் .   வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன் . வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது . பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது .

குளியலறையில் குளிக்கக் கூடாது.

படம்
வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை. கீழணைக்குளியலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் பாத்ரூமில் குளிக்கக் கூடாது என்ற தடையைச் சந்தித்ததைச் சொல்ல வேண்டும். வார்சாவிற்குப் போனவுடன் நாங்கள் சந்தித்த குளியல் அறைச் சம்பவம் சுவாரசியமானது. திருநெல்வேலியில் ஆத்திலும் அருவியிலும் குளிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் தினசரிக் குளியல் என்னவோ வாளித்தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளிப்பதுதான். அதற்கு வார்சாவில் விடுதலை கிடைத்தது. கழிப்பறையோடு கூடிய குளியலறையில் ’பாத் டப்’ இருந்தது. வெந்நீரையும் தண்ணீரையும் நிரப்பிக் கொஞ்ச நேரம் மூச்சடக்கி

இந்தியவியல் துறைகளின் தேவை.

படம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் வந்திருக்கிறேன். இந்தியவியல் புலத்தில் போலந்து மாணவ மாணவி களுக்கு காலப்பழமையும் பாரம்பரிய வளமும் கொண்ட இந்தியாவின் செவ்வியல் மொழிகளான  சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றோடு இந்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய சார்பு மொழிகளையும் கற்பிக்கப் போலந்து பேராசிரியர்களும், இந்தியாவிலிருந்து வருகை தந்து குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இம்மொழிகளின் நிகழ்கால இருப்பைக் கற்றுத்தரும் வருகை தரு பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

வலதுசாரியாக மாறியாக வேண்டும்

படம்
பல்கலைக்கழகம் வரை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்த மாணவிகள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிப்  பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரும் பாதையைப் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உறுதி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. பாதை பிடிபட்டு விட்டது என்று நான் சொல்லவும் இல்லை; ஆனால் அந்த முடிவை அவர்களே எடுத்து விட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இரண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து விட்டு வாபஸான போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.