இடுகைகள்

செவ்வியல் : ஒரு விவாதம்

முகநூலில் எப்போதாவது தொடர் விவாதம் நடப்பதுண்டு. அண்மையில் நான் போட்ட ஒரு முகநூல் பதிவைத் தொடர்ந்து பலரும் பங்கேற்று விவாதித்தனர். அந்த விவாதத்தை   செவ்வியல்: ஒரு விவாதம் எனத் தொகுத்துச் சொல்லலாம் எனத்தோன்றுகிறது. முகநூல் பக்கம் வராதவர்களுக்காக இங்கே தருகிறேன்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்- விமரிசனம் அல்ல; விவாதம்

படம்
லண்டனிலிருந்து வெளிவரும் இணைய இதழ் எதுவரை?. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்படுத்திய தாக்கம் குறித்து வினாக்களை அனுப்பி பதில்களைப் பெற்று வெளியிட்டது. அந்த வினாக்களும் விடைகளும் இங்கே தரப்படுகிறது. என்னைப்போலவே திரைப்படங்கள் குறித்துக் கருத்துக்கள் கூறும் ஜமாலன், கலைஅரசன், ராஜன்குறை ஆகியோரும் இந்த வினாக்களுக்கு விடைகள் சொல்லி இருந்தார்கள். மொத்த விவாதத்தையும் படிக்க அங்கே செல்லலாம். அதற்கான இணைப்பு:  http://eathuvarai.net/?p=2776                 இங்கே எனது விடைகள் மட்டும்

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்

படம்
1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை. உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான். நான் பார்த்திருக்கிறேன் என்றாலும் என்னைப் பார்த்தது அவருக்கு ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. அவருக்குத் துறையிலிருந்து அழைப்பிதழ் போயிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ’படைப்பாளிகள் கருத்தரங்கம்’ என்பதற்கான முகவரிக் கோப்பில் இருப்பவர்களுக்கெல்லாம் கடிதங்கள் போயிருக்க வாய்ப்பும் உண்டு. அரசு நிர்வாகத்தில் வகைப்பாடுகள் முக்கியம். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பார்வையாளர்கள் எனப் பகுத்துப் படம் காட்டுவதுதான் அதன் இயல்பு. பொதுவான பார்வையாளர்கள் அந்நிறுவனத்தின் பணியாளர்கள். இங்கே மாணவர்கள். அவர்கள் கட்டாயம் ப

ஆஸ்லோவில் பொங்கல் விழா

படம்
பங்கேற்ற பொங்கல் விழாக்களில் இப்போதும் நினைவில் இருக்கும் இன்னொரு பொங்கல் விழா நார்வே நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் கொண்டாடப்படும்   தமிழர் திருநாள் கொண்டாட்டங்க ள். தங்கள் அடையாளமாக இருக்கும் மொழியின் வழியாக மட்டும் அல்லாமல் அதன் மையமான கொ ண்ட்டாட்டத்தின் வழியாகவும் தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டும் என நினைக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் , தாங்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும் பொங்கல் விழாவினைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்லோவில் நடந்த இந்த விழாவில் (2013, ஜனவரி, 19) கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.