கண்டிக்கவே முடியாத நிலையில் தண்டனை
இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, இத்துடன் அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.