இடுகைகள்

நிரல் நிரைப்படுத்தலின் அழகு : க.சீ.சிவக்குமாரின் ரசாயனக் கலப்பை

வார இதழொன்றில் இடம்பெறும் சிறுகதையை வாசிக்கத் தூண்டுவதற்கு உடனடிக் காரணங்கள் சில உண்டு. தொடர்ச்சியான வாசகராக இருந்தால் எழுதியவரின் பெயரே வாசிக்கத் தூண்டிவிடும். சிலநேரங்களில் எழுதியவர் கதைக்குத் தரும் தலைப்பு வாசிக்கத் தூண்டும். கதைகளுக்கு ஓவியங்கள் அச்சிடும் இதழாக இருந்தால் அவையும் கதைகளை வாசிக்கத்தூண்டவே செய்யும். நான் மாணவனாக இருந்த காலத்தில் (1970-80கள்) ஓவியர் ஜெ...(யராஜ்) வரையும் தொப்புள் தெரியும் பெண்களின் ஓவியங்களுக்காகவே நானும் என் வயதொத்த இளைஞர்களும் கதைகள் வாசிப்போம்; பேசுவோம்.

அரங்கியல் பெருவெளியை நிரப்பிய ந. முத்துசாமி.

படம்
அரங்கியலாளர் ஒருவரை அவரது நாடகமேடையேற்றம் சார்ந்தே கொண்டாட வேண்டும்; விமரிசிக்கவேண்டும். அதுவே அவருக்கு   உவப்பானது. விமரிசிக்கிறவனின் நிலைபாட்டுக்கும் சரியானது.   ந.முத்துசாமியின் அனைத்து நாடகங்களும் ஒரே தொகுதியாக கே.எஸ். கருணாபிரசாத் அவர்களால் தொகுக்கப்பட்டு என் முன்னே இருக்கிறது. அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று இங்கிலாந்து . அந்நாடகம் கால் நூற்றாண்டிற்குப் பிறகு திரும்பவும் புதிய நெறியாள்கையில் -இடதுசாரி நாடகக்காரராக அறியப்படும் பிரளயனால் மேடையேற்றம் கண்டுள்ளது. நாடகப் பிரதிகளின்   வழியாகவும் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் களத்தின் வழியாகவும் உலக வரைபடத்திற்குள் தமிழ் மொழியையையும் தமிழ் அரங்கியலையும் கொண்டுபோன ந. முத்துசாமியைப் பற்றிப் பேச ஏற்ற தருணம் இது.

நாகேஷ்: உடல் மொழியின் பரிமாணங்கள்

படம்
துன்பத்தை விளைவிப்பதும் , அழிவைத் தோற்றுவிக்காததுமான ஒரு பொருளைக் கருத்தாகக் கொண்டு இயற்கையாக உள்ள மனித நிலைக்கு மாறாக , தாழ்ந்த நிலையில் உள்ளவனைச் சித்திரிக்கும் நாடகம் இன்பியல்   ( Comedy) நாடகம் .   அரிஸ்டாடிலின் கவிதையியல்

தலைப்பில் தங்கும் கதைப்பொருள் : போகன் சங்கரின் பொதி

நிகழ்கால எழுத்தாளனிடம் எதையெழுதலாம் என்று கேட்டால் எதையும் எழுதலாம்;  இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறையெல்லாம் இல்லையென்று சொல்லக்கூடும். அப்படிச் சொல்வது முழுமையான உண்மையல்ல. நிகழ்காலத்தில் எழுதப்படும் எல்லாமும் ஏற்கெனவே இருக்கும் வரையறைகளின் மாற்றுவடிவங்களேயன்றி, முற்றுமுழுதான புத்தாக்கமல்ல.