இடுகைகள்

சோ.தர்மன்:நிலவியலில் நிறுத்திய எழுத்து

படம்
என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.

கலையைப் பொதுவில் வைப்பது

படம்
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன.

துலிப் மலர்க்காட்சி: நன்றியின் வண்ணங்கள்.

படம்
அந்த விழாவைக் காணும் வாய்ப்புக் கொஞ்சம் தவறிவிட்டது.  கனடாவில் தேசியத்தலைநகர் ஒட்டாவிற்கு இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் அந்தப் பெருவிழாவைக் கண்டு களித்திருக்கலாம். ஒவ்வோராண்டும் 5 லட்சம் பேருக்கும் அதிகமாக வந்து களித்துக் கொண்டாடிப் போகும் துலிப் மலர்க்காட்சி விழாவிற்காக ஒட்டாவா நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ஆண்டுக்கான ( 2016) துலிப் மலர் விழா மே, 12 முதல் 23 வரை நடக்கப்போகும் இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் விழாவில் பங்கேற்றிருக்கலாம். என்றாலும் மலர்கள் வந்திறங்கிவிட்டன. நடப்பட வேண்டிய இடங்களில் நட்டுவிட்டார்கள். மொட்டாகவும் விரிந்தும் மலர்கள் வண்ணவண்ணமாய் விரிந்துகிடக்கின்றன.

சூழலில் அர்த்தமாகும் கவிதை:

படம்
இது கவி சமயவேலின் அடையாளம் அல்ல. அவருடைய பெரும்பாலான கவிதைகள் வெளிப்படையான அரசியல் கவிதைகள் அல்ல. சமூகப் போக்கைச் சந்திக்கும் கணத்தில் அதை விளங்கிக் கொள்ள முடியாமலும், விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அதைச் சந்திப்பது எப்படியெனப் புரியாமலும், கடந்து செல்லும் வழியறியாமலும் தவிக்கும் தனிமனிதர்களின் தன்னிலைகளை அவரது பலகவிதைகளில் வாசிக்க முடியும். அந்தத் தன்னிலைகளை முழுமையாகக் கவி சமயவேலின் தன்னிலை என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அவர் முன்வைக்கும் மனிதர்களின் தன்னிலையாகவும் விளங்கிக் கொள்ளலாம்.