இடுகைகள்

சிற்பியின் நரகம்

படம்
புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் சிறுகதை, நாடகத்திற்குத் தேவையான முரணைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பிரதி. கதைமாந்தர்களுக்கிடையேயுள்ள முரணை, இக்காலகட்ட இந்திய நிலைமையோடு பொருத்திப்பார்த்து வாசித்து நாடகமாக எழுதப்பட்டுள்ளது. நாட்டில் வளர்ந்துவரும் மதவாதம்தான் சிறுகதையை நாடகமாக எழுதத்தூண்டியது. சரியான மேடையேற்றங்கள், அதன் பொருத்தத்தை உணரச்செய்யும். பாண்டிச்சேரி கூட்டுக்குரல் அமைப்பு மதுரையிலும் பாண்டிச்சேரியிலுமாக இரண்டுமுறை மேடையேற்றியுள்ளது. 

பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

படம்
ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடு தான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக் கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

திறமான ஆய்வு நூல்கள் - தேடிப்படித்த நூல்கள்

 கல்விப்புலப்பார்வையில் திறமான ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுநோக்கைத் திறத்துடன் வெளிப்படுத்திய ஆய்வுநூல்கள் இவை

ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்

படம்
இப்படியொரு நாடகத்தை எழுதுவேன் என நினைக்கவில்லை. எழுதக் காரணமாக இருந்தவர், அப்போது எனது மாணவராக இருந்த சிபு எஸ்.கொட்டாரம் (இப்போது கள்ளிக்கோட்டை நாடகப்பள்ளியின் ஆசிரியர்). இயக்கத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்த அவரது தேர்வுக்கான தயாரிப்பாகச் சாமுவேல் பெக்கட்டின் புகழ்பெற்ற நாடகமான கோதாவுக்காத்திருத்தல் -வெயிட்டிங் ஃபார் கோடார்ட்- நாடகத்தைத் தமிழாக்கித் தரமுடியுமா எனக்கேட்டார்.