நவீன நாடகங்கள்: மேடையேற்றப் பிரச்சினைகள்
உள்ளடக்கம் தான்ஆதாரமானது. பெரும் தடைகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்று விட்டனவும்,பெறப் போராடிக் கொண்டிருப்பனவும் மட்டுமே நவீன என்பதில் அடங்கும்; பழைமைக்கு நவீனத்தில் இடமே இல்லை என்ற வரையறையில் கூட நவீன உள்ளடக்கம் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக நினைக்கிறேன். அப்படியானால் ‘நவீன வடிவம், நவீன மேடையேற்ற ரூபம் என்பவை என்ன..? நீங்கள் நினைப்பது சரிதான். அந்த வரையறை உள்ளடக்கம் பற்றியதுதான். ஓரளவு மற்றவைகளுக்கும் பொருந்தக்கூடியதே.