இடுகைகள்

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்

படம்
காலைத் தினசரிகளில் நான் காலையில் வாசிப்பன செய்திகள். நீண்ட செய்திகள் - பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால் அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். அலுவலகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன். மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப் போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு.

பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.

காலில் ஒட்டாத கரிசல் மண்

படம்
வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு என்றொரு தொடரைக் குமுதம் இதழில் கி.ராஜநாராயணன் ஆரம்பித்தபோது நான் இந்தியாவில் இல்லை. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் போலந்து நாட்டுக்காரர் களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த நண்பர் ஒருவர் ‘உனது பெயரும் அவ்வப்போது இடம்பெறுகிறது’ எனத் தொலைபேசியில் சொன்னார். சொன்ன பிறகும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் கிடைத்தது.

வெண்பனி போனது; வசந்தமே வருக; வருக வசந்தமே!!

படம்
தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதிக்கு எனது வாழ்த்துகள் கண்டத்தின் வரைபடத்தைப் பார். குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனவே அவை என்ன? என்னவெல்லாம் நிரந்தரமானவை ; எவை நிலைத்திருக்கப் போகின்றன நதிகளையும் மலைகளையும் தவிர வேறெவற்றைச் சொல்ல முடியும் மனித ஞாபகங்களையும் விட மூத்தவை அவற்றின் நினைவுகள் ரொம்பவும் உண்மையானவை; மறைந்து ஓடும் ஆழ்மனச் சுழல்கள் பேசிப்பேசித் தீர்த்துக் கொள்ளும் அல்லது மௌனச் சுழலாய் நகர்ந்து போகும் வயது முதிர்ந்த லாவா நதியே பல வருடங்களுக்குப் பின் திரும்பவும் உன்னை வாழ்த்துகிறேன் நீ கடந்து வந்த வசந்தத்தின் நிறமாலைகளும் இலையுதிர்காலத்துச் சருகுகளும் எத்தனை எத்தனை நீ பார்த்துக் கடந்த பாரம்பரியம் மாறாக் குடில்களும் நெடிதுயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உனக்குப் பாதை ஒதுக்கும் கண்ணாடி மாளிகைகளும் கான்கிரீட் வனங்களும் வயது முதிர்ந்த நதியே எனது வருகைக்காக அக்டோபர் மாதத்துச் சூரியனை எடுத்துக் கொண்டு வா . கலைந்த ஆடைகளோடு தூங்கி விழிக்கும் உன்னை காண வேண்டும் மரங்களும் புதர்களும் உன் தழுவல்களுக்காகக் கரையோரங்களில் காத்து நிற்கின்றன ஏற்றப்பட்ட

தண்டனைகளற்ற உலகம்

ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம்.

இன்குலாப்: இப்படி நினைக்கப்படுவார்

படம்
நவீனத்துவக் கவிதை ஒருவர் இன்னொருவரோடு பேசும் அல்லது முன்வைக்கும் சொல்முறையைக் கொண்டிருப்பதாக அமையவேண்டும் என்பது தமிழில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்றாக ஆகிவிட்டது. அந்த இன்னொருவரைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு பேசும் சாத்தியங்கள் இருந்தால் அவையே நவீனத்துவக் கவிதையின் நுட்பமாகவும் நம்பப்படுகிறது. இதற்குமாறாகத் தன் சொற்களை ஒருவரோடல்லாமல் பலருக்கும் சொல்லும் வடிவத்தைக் கொண்ட கவிதையைப் பிரச்சாரம் எனப் பேசி ஒதுக்குவதும் நவீனக் கவிதையை நிறுவிவிடும் விமரிசகர்கள் அல்லது இலக்கியவாதிகளின் போக்காக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் சாகுல் அமீது என்ற பெயரை “ இன்குலாப்” என மாற்றிக்கொண்டவரைக் ”கவி” யென அங்கீகரித்ததில்லை.

தமிழ் என்பது நபர்கள் அல்ல

படம்
வெற்றித்தமிழர் பேரவை - 2014,நவம்பர்,11 இல் உத்தர்கண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவருக்குச் சென்னையில் பாராட்டுவிழா ஒன்றை நடத்திய அமைப்பு அல்லது அறக்கட்டளை. இவ்வமைப்பு பாடலாசிரியர் வைரமுத்துவின் தமிழ்ப் பணியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒன்று.

ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி

படம்
வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தப் போகிறது. இந்நிகழ்வின்மூலம் திரு மு. கருணாநிதி, இரா. வைரமுத்து ஆகியோர் வரிசையில் இணைக்கப்படுகிறார் ஜெயமோகன். தங்களின் எழுத்துகளைச் சந்தைப்படுத்தும் உத்தியில் இதுவரை அவ்விருவரும் பின்பற்றிய அதே உத்திதான் இதுவென்றாலும் நிலைப்பாட்டில் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.

பிசாசு எழுதுதல் ( நவீன தமிழ்க் கவிகளின் கவிதைகள்)

படம்
இன்னொருவரால் எழுதமுடியாத பனுவல்கள் இவை என விமரிசனக் குறிப்புகளை இனியும் எழுதமுடியாது; ஏனென்றால் எல்லாப்பனுவல்களும்  ஆசிரிய நோக்கப்படி செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனுவல்களுக்கும் எழுதுபவர்களுக்குமான உறவுகுறித்து மறுபரிசீலனைகளைப் பின்நவீனத்துவம் முன்வைத்தது.  இந்தப் பின்னணியில் பின்வரும் கவிதைகள் குழுவின் ஆக்கம் என்பதோடு வாசிக்கப்படவேண்டியவை.

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமரிசனம்

படம்
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ்.

ழான் க்ளோத் இவான் யர்மோலாவுக்கு அஞ்சலி

  ஊடக நண்பர்களே !   ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது . நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014)   தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன் .

எண்பதும் நாற்பதும்

படம்
போலந்து, வார்சா பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் கற்பிக்கப்போன பேராசிரியர்கள் பலருக்கும் கிடைக்காத ஓர் அனுபவம் எனக்குக் கிடைத்தது. 2011 அக்டோபர் 10 இல் வார்சா பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இரண்டு நாட்கள் கழித்துத் துறையில் நடக்க இருக்கும் 3 நாள் கருத்தரங்க அழைப்பினைக் கொடுத்துவிட்டு நீங்கள் இருக்கப்போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் இரண்டு பெரும் நிகழ்வுகளில் பங்கேற்கப்போகிறீர்கள் என்றார். என்ன நிகழ்வுகள் என்று நான் கேட்கவும் இல்லை; அவர் சொல்லவுமில்லை. 

கண்டிக்கவே முடியாத நிலையில் தண்டனை

இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, இத்துடன்  அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு  என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.

தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.

படம்
வார்சாவில் நான் முழுமையான மொழியாசிரியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கசப்போடு தான் முதலில் ஏற்றுக் கொண்டேன். கசப்புக்கான முதல் காரணம் முழுமையான மொழி ஆசிரியனாக என்னை எப்போதும் கருதிக் கொண்டதில்லை. அத்துடன் மொழிக்கல்வியில் ஒரே விதமான கற்கை முறையை எல்லா இடத்திலும் பின்பற்ற முடியாது. ஒருவரின் தாய்மொழியைக் கற்பிக்கும் அதே முறையை எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடாது என்பது மொழியாசிரியர்களுக்குத் தெரியும். தாய்மொழியாக அல்லாமல் ஒரு நாட்டின் இன்னொரு மாநிலமொழியைக் கற்பிக்கும் முறையைக் கூட அயல் தேசத்தில் மொழி கற்பிக்கும்போது பின்பற்ற முடியாது. வார்சாவில் தமிழ் கற்பிக்கப்போகும் முன்பு இந்த முறைகளையெல்லாம் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவனாக நான் செல்லவில்லை. 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : நவீனத்துவ சினிமாவின் தமிழ் முகம்

படம்
இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. படம் பார்க்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டு அரங்கிற்குக் கிளம்பியபோது மனதில் இருந்த படங்கள் இவையல்ல. நினைத்துப் போன படங்களைப் பார்க்க முடியாமல் திசைமாறிப் பார்த்த இரண்டு படங்களுமே பிடித்த சினிமாக்களின் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டது தற்செயலின் அடுத்த கட்டம். திரைக்கு வந்த முதல் நாளில் இரண்டையும் பார்க்க நேர்ந்துவிட்டதையும்கூடத் தற்செயல் விளைவின் பகுதியாகவே சேர்த்துக் கொள்ளலாம்.(முதல் படம் கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா ; சென்னை நகரத்தின் பல் அரங்கு வளாகம் ஒன்றில். இரண்டாவது ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம்; திருநெல்வேலியில் அரைநூற்றாண்டு கடந்த அரங்கம் ஒன்றில்) 

பிரசந்ந விதனகேயின் இரண்டு சினிமாக்கள் : வித் யூ வித் அவுட் யூ, பூர்ணமை நாளில் ஒரு மரணம்

படம்
மன்னிப்பதிலிருந்து அல்ல; மன்னிப்புக் கேட்பதிலிருந்து தொடங்கலாம். பேரினவாதக் கருத்தியலும் மேட்டிமைவாத- உயர்சாதிக் குறுங்குழுவாதமும்- மோதிக் கொண்ட ஒரு பூமியாக இலங்கையை விரித்துக் காட்டிப் பேசத்தொடங்கும் பிரசன்ன விதனகேயின் சினிமா ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு இந்தமுறை சென்னை சென்ற போது கிடைத்தது. படத்தின் ஆங்கிலத் தலைப்பு With You Without You. ஆங்கிலத் தலைப்பை அப்படியே நின்னோடா? நீயின்றியா? என மொழி பெயர்க்காமல் பிறகு எனத் தலைப்பிட்டு இருந்தார் அதன் இயக்குநர். அவரது தாய்மொழியான சிங்களத்தில் வைத்துள்ள தலைப்புக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை.

திருமணம் என்னும் நிக்காஹ்: தமிழ்ச் சினிமாவின் பொதுப் போக்கிலிருந்து ஒரு விலகல்

படம்
காதல் பற்றிப் பேசாத ஒரு தமிழ்ச்சினிமா ஆண்டில் ஒன்றிரண்டு கூட வருவதில்லை.  ‘இவர்களின் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு கதையை விரிக்கிறார்கள் நமது தமிழ்ப்பட இயக்குநர்கள். அப்படி விரிக்கும் தொண்ணூறு சதவீதக் கதைகள் நமது சங்கக் கவிதைகளின் விரித்தி உரைகள் தான்.

பத்துக்கதைகள்- புனைவின் பத்து முகங்கள்

படம்
கல்லூரிக் காலத்தில் மாதம் தவறாமல் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகை கணையாழி. “இலக்கியச் சிந்தனையின் மாதச் சிறுகதையாக கணையாழியில் வந்த கதை தேர்வு பெற்றுள்ளது”என்ற குறிப்பை அதில் அடிக்கடி பார்ப்பேன். எனக்குள் பலவிதமான தூண்டுதல்களைச் செய்த குறிப்பு அது என்பதை எப்போதும் மறப்பதில்லை. இந்தக் கட்டுரைக்கும்கூட அந்தக் குறிப்புதான் தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.