இடுகைகள்

அடையாளம் அழிக்கும் புனைவு வெளி

படம்
இந்த ஐந்து கதைகளும் புத்தம் புதிதான கதைகள். 2015, நவம்பர் மாதத்தில் வந்த இதழ்களில் அச்சான கதைகள். கதைகளை எழுதியவர்கள் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும்கூட. எழுதியனுப்பிவிட்டு அச்சேறுவதற்குக் காத்திருக்காமல் அனுப்பினால் உடனே அச்சாகும் வாய்ப்புள்ள எழுத்தாளர்கள். அதுதான் அவர்களை அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆக்குகிறது. அறியப்பட்ட எழுத்தாளர் என்பது அவர்களின் எழுத்தின் வழியாக அறியப்பட்ட அடையாளமே. எப்படி அறிந்திருக்கிறோம் என்பதோடு அவர்களின் கதைகளின் விவரங்களை முதலில் தந்துவிடலாம். அறியப்பட்ட எழுத்தாளர்கள்: வாசிக்கக் கிடைத்த கதைகள்: அம்பை-தன்னுணர்வு கொண்ட பெண்ணியப் புனைவு எழுத்துகளின் தனிக் குரல் . அவரது கதை: தொண்டை புடைத்த காகம் ( இந்து தமிழ், பக் 190 -195) · ஆண்- பெண் உறவின் சிக்கலான புள்ளிகளை- பாலியல் சார்ந்த ஈர்ப்பினை லாவகமாக எழுதுவதில் தேர்ச்சி பெற்ற கை வண்ணதாசனின் கை. அவரது கதை: சற்றே விலகி, உயிர் எழுத்து, (பக்.44- 48) · சாதியமுரண் சார்ந்த கிராம வாழ்வில் தலித்துகளின், குறிப்பாகத் தலித் பெண்களின் துயரத்தையும் தணிந்து போய்விடாத தன்னம்பிக்கையையும் சிறுகதைகளாகத் தொடர்ந்து எழுதிவரு

சல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்

படம்
படப்பிடிப்புக் கருவிகளுடன் தவிக்கும் செய்தி ஊடகக்காரர்களின் ஒருவார காலத் தவிப்பாக ஆகி விட்டது ஜல்லிக்கட்டு. காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு போன ஆண்டு நிகழ்வு. இந்த ஆண்டும் நிகழலாம்; இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரலாம்.

சாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்

படம்
“சாகித்திய அகாதெமியின் விருதுகளைத் திரும்பத்தருதல்” என்பதற்குள் இப்போது நுழைய வேண்டியதில்லை. ‘திருப்பித் தந்தேயாக வேண்டும்’ என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. அது அவரவர் விருப்பமும் நிலைபாடும் சார்ந்தது. அதேநேரத்தில் அரசதி காரமும், அதன் துணையில் வளரும் பிளவுசக்திகளும் தொடர்ந்து சகிப்பின்மையை விதைக்கும்போது எழுத்தை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டியங்கும் ஓர் எழுத்தாளன், தனது எதிர்ப்புணர்வைக் காட்டாமலும் இருந்து விடக்கூடாது. சகிப்பின்மையையும் தேசத்தின் பல்லிணக்க நிலைக்கெதிரான கருத்துநிலையையும் முன்வைத்து இந்தியா முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் தானே முன்வந்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எந்தத் தமிழ் எழுத்தாளரும் பங்கேற்கவேண்டுமென நினைக்கவில்லை என்பது தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு களங்கம் என்பதிலும் சந்தேகமில்லை.

கலை - கலைஞன் - காலம் :எஸ். வைத்தீஸ்வரனின் கதையெழுப்பும் விசாரணை

  இலக்கியப்பனுவலென நினைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி முடிக்கும் எல்லாப் பனுவல்களும் அந்த உணர்வை தந்துவிடுவதில்லை. சில பனுவல்களை அப்படி நினைக்காமலேயே வாசிக்கத் தொடங்கி முடிக்கும்போது ‘நீ வாசித்தது கூடுதல் கவனம் செலுத்தி வாசித்திருக்கவேண்டிய இலக்கியப்பனுவல்’ என மனம் சொல்லும்.  திரும்ப வாசிக்கும்போது இன்னொரு புரிதலும் உருவாகும். அப்படியான புரிதல்கள் கிடைக்கவும், உணர்வெழுச்சி உண்டாகவும் காரணமாக இருப்பவை எழுதுகிறவர் உருவாக்கித் தரும் பின்னணிகள் சார்ந்தவைகள் என்பது ஏற்கத்தக்க ஒன்று

பயிலரங்கு அறிவிப்பு

  தமிழியல் ஆய்வுகள் :  நிகழ்ந்துள்ளனவும்                               நிகழ்த்தப்படவேண்டியனவும்    

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை என்னைக் கவிதைகள் எழுதவைத்துவிட்டது நன்றி மழைக்கு---

காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும்.

தொலைந்துபோன அறிவுவாதம்

நீண்டகாலமாக நேரடியாகச் சந்திக்காத நண்பர்கள் பலரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. நான் இருக்கும் பாளையங் கோட்டைக்கு வந்தவர்களோடு நின்று நிதானமாகப் பேசும் நிலை இல்லை. நான் இல்லை என்பதைவிடஅவர்கள் இல்லை என்பதே உண்மை. அவசர அவசிய வேலை ஒன்றிற்கான பதற்றம் எப்போதும் போல அவர்களிடம் இருந்தது.

பேரா. நொபுரு கரஷிமா என்னும் தமிழியல் ஆய்வாளர்

படம்
ஒரு பெயரை உடன்பாட்டுநிலையில் தெரிந்து கொள்வதைவிட எதிர்மறையாகத் தெரிந்து கொள்வதே தமிழ்நாட்டில் அதிகம் நடக்கும். பல உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும், வரலாற்றறிஞர் பேரா. நொபுரு கரஷிமா (!933, ஏப்ரல், 24 - 2015 நவம்பர், 26) அப்படி அறியப்பட்ட பெயர்களுள் ஒருவராக இருந்தார் என்பதுதான் வருத்தமான வரலாறு. தி.மு.க. ஆட்சியின்போது (2006-2011) நடந்த செம்மொழி மாநாட்டை யொட்டித்தான் அவரது பெயர் பரவலாக அறிய வந்தது.

மணற்கேணியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்

முன்னுரை ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியின் இயல்பையும் இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப்போக்கிற்கான காரணங்களோடு அறிந்து கொள்ள வேண்டியது அடிப்படைத்தேவை. அந்தத்தேவை நிறைவேறும் போதுதான் அந்த நபர் தனது சொந்தப் பண்பாட்டுக்குள் இருப்பதை உணரமுடியும். ஒருவரின் தன்னிலை அல்லது இருப்பு என்பதே அவரது தாய்மொழியாலும், அதில் உருவான இலக்கியப்பிரதிகளாலும், அதன் வழியாக உருவாகும் பண்பாட்டுக் கூறுகளாலுமே உருவாக்கம் அடைகிறது.

திரு.வைரமுத்தின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறது

படம்
வெகுமக்கள் அரசியல் தளத்தில் இயங்கும் ஒருநபரின் எதிர்பார்ப்பு ஊடகங்களில் தனது பெயர் உச்சரிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கிறது. ’நல்லவர்; திறமையானவர்’ என்று மட்டுமே உச்சரிக்கப்படவேண்டும் என்பதில்லை அவரது விருப்பம். விமரிசனமாகக்கூட உச்சரித்தால் போதும். அந்த விமரிசனத்திற்குப் பதில் சொல்லும்விதமாக இவரும் தன் பெயரைத் திரும்ப ஒருமுறையோ பலமுறையோ சொல்லிச்சொல்லித் தன்னை நிலை நாட்டிக் கொள்வார். இதே மனநிலை வெகுமக்கள் ரசனைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் எழுதுவதாக நம்பும் எழுத்தாளர்களிடம் எப்போதும் இருக்கிறது. சுஜாதா கடந்தகால உதாரணம். வைரமுத்து நிகழ்கால உதாரணம்.

விவேக்: ஓசைகளின் நேசன்

படம்
வாசி எத்தஸ்து கர்தவ்யஹ் , நாட்ய ஸ்யஸ்யா தனஸ்மிருதா அங்கனே பத்தியஸ்துவானி , வாக்யாரத்னம் ஜயைந்தி ஹீ - பரதரின் நாட்ய சாஸ்திரம்; இதன் பொருளாவது யாதெனில், எண்ணிய கருத்தை எடுத்துரைப்பது மொழி. அடிமனத்தில் உள்ள கருத்தை அவனுடைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மொழிக்கே அந்த ஆற்றல் இயல்பாக அமைந்திருப்பதால் அந்த நுட்பத்தை குறிப்பால் பொருள் உணர்த்தும் தொனி என்கிறார்கள்

விளையாட்டு - வேட்டை - வியாபாரம்

படம்
புனைகதையின் இருவேறு வடிவங்களையும்-சிறுகதை, நாவல் -வேறுபடுத்தும் அடிப்படைகளில் 'அளவு'க்கு முக்கியமான இடமுண்டு. அளவு என்பது எழுதப்படும் பக்க அளவல்ல. புனைகதை இலக்கியத்தில் விரியும் காலம் மற்றும் வெளியின் விரிவுகளே சிறுகதையிலிருந்து நாவல் இலக்கியத்தை விரிவாக்கிக் காட்டுகின்றன. இவ்விரண்டும் விரியும் நிலையில் அதில் இடம்பெறக்கூடிய பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிட வாய்ப்புண்டு. 

வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

படம்
புகுமுக வகுப்பு வரை கணித மாணவனாக நினைத்துக் கொண்டிருந்த என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்தான். டேனியல்போர் என்னும் ஆங்கிலேயரின் பெயரில் அமைந்த நூலகத்தின் மாடிப்பகுதியில் தான் செய்தித் தாள்களும் இதழ்களும் அடுக்கப்பட்டிருக்கும். நாள் தவறாமல் தினசரிகளை படிக்கும் அரசியல் உயிரியாக இருந்த என்னைக் கதைகள் படிக்கும் மாணவனாக மாற்றியது   அவற்றின் அருகில் அடுக்கப்பட்டிருக்கும் வாராந்திரிகளும் மாதாந்திரிகளும்.

வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்

பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில், வரலாறு எப்போதும் மாமிசங்களால் மட்டுமே எழுதப்படுகிறது என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது.

தமிழினி: போராட்டக்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்த பயணம்.

படம்
ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல் தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.  

சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.

வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப் படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்து விட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். அப்படி வராவிட்டால் தேடியவருக்குத் தோல்வி. வைத்தவருக்கு வெற்றி. அப்படி விளையாடும்போது எங்கள் ஊரில் “தில்லி தில்லி பொம்மக்கா” சொல்லிக்கொண்டே வைப்பார்கள்; எடுப்பார்கள். பெண்கள் இருவர் விளையாடும் இந்த விளையாட்டைச் சில நேரங்களில் பெண்களும் ஆண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். மூடியிருக்கும் எதிர்பாலினரின் கையை நோண்டிவதற்கான வாய்ப்பாகப் பயன்படும் விளையாட்டு அது. திரியைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியோடு

ஊடக யுத்தம்: வென்றிலென் என்றபோதும் ?

வென்றி என்பது வெற்றி என்னும் சொல்லின் பழைய வடிவம் என்பதை ஊகிக்கமுடிகிறது. வென்றி என்பது பழைய சொல்லா? வெற்றி என்பது பழைய சொல்லா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இன்று வெற்றியையெடுக்க அல்லது வெற்றியைக் கைப்பற்றக் களமாட வேண்டும். தனிமனிதர்களும் கூட்டமும் போராட வேண்டும். களம் நிகழ்காலத்தில் போராட்டக் களம். போராட்டங்களில் மௌனமாக இருத்தல் தொடங்கி, ஒத்துழையாமை, உண்ணாநிலை குரல் எழுப்புதல், மறியல், சட்டம் ஒழுங்கைக் குலைத்தல் எனப் பலவடிவங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த வடிவம் போர்க்களம்.ரதகஜதுரகபதாதிகளோடு மோதிவீழ்ந்த போர்க்களம்.

கமல்ஹாசன்: இரண்டும் கலந்த கலவை

படம்
துன்ப உணர்வுகளும் இன்ப உணர்வுகளும் கலவையாக வெளிப்படும் நாடகத்தையோ அல்லது வேறுவகைப்பட்ட இலக்கிய வகையையோ அல்லது இன்ப துன்பங்களை ஒருசேரத் தரும் நிகழ்வையோ குறிக்கும் சொல்லாக துன்ப இன்ப நாடகம் என்றை சொல்லைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் டிராஜிக் காமெடி ( Tragic Comedy) என்று வழங்கும் இச்சொல் பிரெஞ்சு மொழியில் tragicomedie எனவும் இத்தாலிய மொழியில் tragicommedia என்றும் சொல்லப் படுகிறது. இவை அனைத்தும் லத்தீன் மொழிச் சொல்லான Tragicomoedia என்பதிலிருந்து வந்தவைதான். -  American Heritage Talking Dictionary.

நிரல் நிரைப்படுத்தலின் அழகு : க.சீ.சிவக்குமாரின் ரசாயனக் கலப்பை

வார இதழொன்றில் இடம்பெறும் சிறுகதையை வாசிக்கத் தூண்டுவதற்கு உடனடிக் காரணங்கள் சில உண்டு. தொடர்ச்சியான வாசகராக இருந்தால் எழுதியவரின் பெயரே வாசிக்கத் தூண்டிவிடும். சிலநேரங்களில் எழுதியவர் கதைக்குத் தரும் தலைப்பு வாசிக்கத் தூண்டும். கதைகளுக்கு ஓவியங்கள் அச்சிடும் இதழாக இருந்தால் அவையும் கதைகளை வாசிக்கத்தூண்டவே செய்யும். நான் மாணவனாக இருந்த காலத்தில் (1970-80கள்) ஓவியர் ஜெ...(யராஜ்) வரையும் தொப்புள் தெரியும் பெண்களின் ஓவியங்களுக்காகவே நானும் என் வயதொத்த இளைஞர்களும் கதைகள் வாசிப்போம்; பேசுவோம்.

அரங்கியல் பெருவெளியை நிரப்பிய ந. முத்துசாமி.

படம்
அரங்கியலாளர் ஒருவரை அவரது நாடகமேடையேற்றம் சார்ந்தே கொண்டாட வேண்டும்; விமரிசிக்கவேண்டும். அதுவே அவருக்கு   உவப்பானது. விமரிசிக்கிறவனின் நிலைபாட்டுக்கும் சரியானது.   ந.முத்துசாமியின் அனைத்து நாடகங்களும் ஒரே தொகுதியாக கே.எஸ். கருணாபிரசாத் அவர்களால் தொகுக்கப்பட்டு என் முன்னே இருக்கிறது. அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று இங்கிலாந்து . அந்நாடகம் கால் நூற்றாண்டிற்குப் பிறகு திரும்பவும் புதிய நெறியாள்கையில் -இடதுசாரி நாடகக்காரராக அறியப்படும் பிரளயனால் மேடையேற்றம் கண்டுள்ளது. நாடகப் பிரதிகளின்   வழியாகவும் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் களத்தின் வழியாகவும் உலக வரைபடத்திற்குள் தமிழ் மொழியையையும் தமிழ் அரங்கியலையும் கொண்டுபோன ந. முத்துசாமியைப் பற்றிப் பேச ஏற்ற தருணம் இது.